tamilnadu

கார்ப்பரேட் ஆதரவு அமைப்புகளிடம் மதிய உணவுத்திட்டத்தை ஒப்படைக்காதே! சிஐடியு அகில இந்திய மாநாடு கண்டனம்

சென்னை, ஜன.26- புதிய தாராளமயக் கொள்கைகளைக் கடைப் பிடிக்கும் பல்வேறு அரசுகள் மக்களுக்கு சத்துணவு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகளை அளிப்பதிலிருந்து விலகுவதற்கு சென்னையில் நடை பெறும் சிஐடியு 16ஆவது அகில இந்திய மாநாட்டில் கண்ட னம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்தச் சேவைகளை நிரந்தரமான துறைகளாக ஆக்கு வதற்கு பதிலாக அவற்றை ‘திட்டங்கள்’ என்ற வரை யறைக்குள் சுருக்கி, அங்கன்வாடி, மதிய உணவு, ஆஷா தொழிலாளர்கள், உதவி ஆசிரியர்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களை நிரந்தர ஊழியர்களாகக் கருதாமல் தன்னார்வத் தொண்டர்களாக நடத்துகின்றனர். ஒதுக்கீட்டை வெட்டுதல், தனியார்மயம், கார்ப்ப ரேட்டுகளை உட்புகுத்தல் போன்ற செயல்பாடுகள் மூலமாக மோடி அரசு 1 மற்றும் 2 இந்த முக்கியமான திட்டங்களை ஒழித்துக் கட்டும் முயற்சியில் ஈடுபடுவதை மாநாடு வன்மையாகக் கண்டிப்பதாக கூறப்பட்டுள்ளது.
வகுப்புவாத ஆதரவு கார்ப்பரேட் நிறுவனங்கள் 
ஐசிடிஎஸ் தனியார்மயம் மூலமாக, சத்துணவு கார்ப்ப ரேட்டுகளின் கைகளில் போகும் ஆபத்தில் உள்ளது; புதிய கல்விக் கொள்கையானது ஆரம்பக் கல்வி மற்றும் வளர்ச்சியை வெறும் மனப்பாடக் கல்வியாக்கி விடும் நர்சரி பள்ளிகளிடம் ஒப்படைத்து குழந்தைகளின் பரந்த வளர்ச்சியை முடக்கி விடுவதற்கு முன்மொழிகிறது. மதிய உணவுத் திட்டம் கார்ப்பரேட்டான ‘அட்சயபாத்ரா’ போன்ற வகுப்புவாத நிகழ்ச்சிநிரல் அடங்கிய அரசு சாரா அமைப்புக்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த முடிவை திரும்பப்பெறவும், பல மாநிலங்களி லும், மத்தியிலும் ஊதியத்தை அதிகரிக்கவும் திட்டத் தொழிலாளர்களின் சம்மேளனங்களும், சங்கங்களும் நடத்திய வீரமிக்க போராட்டங்களுக்காகவும், திட்டத் தொழிலாளர்களின் கூட்டு அமைப்பை உருவாக்கி, இரண்டு தேசிய வேலைநிறுத்தங்களை நடத்தியதற்காக வும் அவர்களுக்கு இந்த மாநாடு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.  திட்டங்கள் மீதான தாக்குதலுக்கும், புதியதாராள மயத்துக்கு எதிராகவும் பயனாளிகளையும், மற்ற துறையினரைத் திரட்டியதற்காகவும்; பாஜக ஆர்எஸ்எஸ்-சின் வகுப்புவாத பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக மக்களைத் திரட்டும் பொறுப்பை எடுத்துக் கொண்டதற்காகவும் இந்த மாநாடு திட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
வீரமிக்க போராட்டங்களை தொடர முடிவு
இந்த மாநாடு மாநிலக் குழுக்களையும், இணைப்பு சங்கங்களையும், திட்டத் தொழிலாளர்களின் சம்மேள னங்களுடன் இணைந்து திட்டங்களை மூடும் முயற்சி களுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், திட்டங்களை நிரந்தரமாக்குவதற்காகவும் போராட்டங் களை வேகப்படுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. குறைந்த பட்ச ஊதியம் பெறவும், ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்புப் பெறவும், 45 ஐ.எல்.ஓ. பரிந்துரை களை அமல்படுத்தவும் தமது கோரிக்கைகள் நிறை வேறும்வரை தொடர்ந்து வீரமிக்க போராட்டங்களை நடத்த மாநாடு தீர்மானிக்கிறது.

;