சென்னை:
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் புதனன்று அக்டோபர் 14 சென்னையில் நடைபெறுகிறது.2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின் றன. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் குறித்த அறிவிப்பை குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.