ஒப்பந்தபடி ஒரு மாதத்திற்கு முன்பே போனஸ், பண்டிகை முன்பணத்தை வழங்காமல் ஒவ்வொரு வருடமும் காலதாமதம் செய்யும் தமிழக அரசைக் கண்டித்து புதனன்று (அக்.23) அதிகாலையில் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சிஐடியு, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வடபழனி பணிமனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் எம்.தயானந்தம் கலந்துகொண்டு பேசினார்.
*************
தெலுங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் புதனன்று (அக்.23) தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மாநிலச் செயலாளர் நம்பிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.