தலைநகர் தில்லியில் 2008 ஆம் ஆண்டு சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக அன்றைய அரசால் தில்லி அம்பேத்கர் பல் கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இளநிலை, முதுநிலை ஆராய்ச்சிப் படிப்புகளை சேர்த்து 40க்கும் மேற் பட்ட பாடப்பிரிவுகளை தற்போது இப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. காஷ்மீரி கேட் வளாகம் - பழைய தில்லி; கராம்புரா வளாகம் - மேற்கு தில்லி; லோடுகிச் சாலை வளாகம் - தெற்கு தில்லி; குதுப் இன்ஸ்டிடியூ ஷனல் பகுதி ஆகிய நான்கு வளாகங் கள் மிகவும் மோசமான நிலையில் போதிய வசதிகள் இன்றி பயன்பாட்டி லும், தீர்பூர் வளாகம் - வட தில்லி; ரோகினி வளாகம் - வடமேற்கு தில்லி ஆகிய இரண்டு வளாகங்களும் கட்டிட வேலைகள் நிறைவு செய்யப் படாமல் பயன்பாடற்றும் கிடக்கின் றன.
தரம் குறையும் ஆராய்ச்சிப் படிப்பு
2014ல் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில்(NAAC) ‘A’ கிரேடு வழங்கியது. தற்போது 2022ல் இப்பல்கலைக்கழகத்தின் தரம் ‘B++’க்கு சென்று இருப்பதற்கான முக்கிய காரணம் உட்கட்டமைப்பு வசதிகளில் போதிய கவனம் செலுத் தாதது. பல வளாகங்களில் விளை யாட்டு மைதானங்கள் மற்றும் கலை அரங்கங்கள் கிடையாது.
உண வகமும் மாணவர்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப இல்லாமல் மிகவும் சிறியதாக உள்ளது. நீர் கசிவால் வகுப்பறைகளின் மேற்கூரை முழு வதும் கருப்புத் திட்டுகள் படிந்தும் சுவர்கள் பழுப்பு நிறத்திலும் காணப் படுகின்றன. வகுப்பறைகள் அனைத்தும் பயன்படுத்தப்படாத பொருட்களை வைக்கும் சேமிப்புக் கிடங்குகளாக உள்ளன. கழிவு நீர் கசிவால் கழிவறைகளையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடும் சிதைவுக்கு உள்ளாகி இருக்கும் உட்கட்டமைப்பு வசதிக ளால் ஆராய்ச்சியின் தரமும் குறைவ தாக மாணவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆர்எப்), 2014ல் 3,565 கல்வி நிலையங்களை ஆய்வு செய்து வெளியிட்ட தரவரிசைப் பட்டிய லில் 96வது இடத்தை தில்லி அம்பேத் கர் பல்கலைக்கழகம் பெற்றி ருந்தது. ஏழு ஆண்டுகள் கழித்து 2023ல் 8,565 கல்வி நிலை யங்களை ஆய்வு செய்து வெளியிட்ட பட்டியலில் முதல் 200 இடங்களில் தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகம் இடம்பெறவில்லை. தில்லி அம்பேத் கர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் (ஏயுடிஎப்ஏ) தகவலின் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 பேராசிரியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்து இருக்கின்றனர்.
கேபின் என்று சொல்லக்கூடிய தனி அறை கள் கூட பேராசிரியர்களுக்கு போதிய எண்ணிக்கையில் இல்லை. பேராசி ரியர்களும் தொடர்ந்து போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரே ஒரு அறை மட்டுமே வழங்கப்பட்டது. அதில் தான் அவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் வைத்துவிட்டு நேரம் கிடைக் கும்போது ஓய்வெடுக்க முடியும்.
உயர்கல்வி ஆணையம் சொல்வது என்ன?
ஏன் அரசுக் கல்வி நிலையங்க ளை ‘அதிலும் நாட்டின் மிக முக்கிய- உயரிய கல்வி நிறுவனங்களைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் ஒன்றிய அரசுக்கு இத்தனை மெத்த னப் போக்கு? 2018-இல் அன்றைய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் (MHRD), பல்கலைக்கழக மானிய குழு (UGC) சட்டம் 1956-ஐ கலைத்து விட்டு அதற்கு பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் (HECI) 2018- ஐ உருவாக்கிக் கொள்ள ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்கலைக்கழகங்கள் நிதியை தானாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் அல்லது கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டி ருக்கிறது.
இங்கு அடிப்படையில் நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரு பல் கலைக்கழகம் எப்படி தானாக நிதியை உருவாக்கிக் கொள்ள முடியும். 1. மாணவர்களிடமிருந்து வசூ லிக்கப்படும் கல்விக் கட்டணத்தை அதிகரிப்பது. 2. பேராசிரியர் பணி நியமனங்களை முறையாக நடத்தா மல் ஒப்பந்த அடிப்படையில் அவர் களை பணியமர்த்துவது.
இதர பணி யாளர்களையும் ஒப்பந்த முறையில் பணியமர்த்துவது. 3. விடுதிகளை ஒப்பந்தத்திற்கு விடுவது, கட்டடங்க ளை புதுப்பிக்காமலும் அவற்றை முறையாக பராமரிக்காமலும் இருப்பது. இவைதான் இன்று உண்மை யில் அனைத்து பல்கலைக்கழகங்க ளிலும் நடந்து கொண்டிருக்கிறது. தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழ கம், ஓர் உதாரணம். தனியார் கல்வி நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மாண வர்கள் லட்சங்களை செலவழித்து உயர்க் கல்வியில் சேர முடியாத நிலையை ஏற்படுத்தி, உயர்கல்விக் கனவை எட்டாக்கனி ஆக்கி, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கக்கூடிய கல்வி பெறும் உரி மையைச் சிதைக்கிறது. இத்தகைய சூழலில் பொதுக் கல்வியைப் பாதுகாக்க அரசால் நடத்தப்படும் கல்வி நிலையங்களை தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்து வதும் அதை பாதுகாப்பதும் இன்றி யமையாதது.