சென்னை, நவ. 24 - நிர்மலா சீதாராமன் பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,100 இணையர்களுக்கு திரு மணம் நடத்தி வைக்கும் திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், 2 இணையர் களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். இதேபோல அறிவா லயத்தில் திமுக பிரமுகரின் இல்லத் திரு மண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர்பேசியதாவது:
ஒன்றியத்தில் பொறுப்பில் இருக்கக் கூடிய ஒரு அமைச்சர், நம்முடைய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்மையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தருகிறார்.
அது என்னவென்றால் கோவில்களை நாம் கொள்ளையடித்துக் கொண்டி ருக்கிறோம் என்கிறார். அதற்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு மிக விளக்க மாக தெளிவாக பதில் சொல்லியிரு க்கிறார். நான் அதற்கு மேற்கொண்டு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், இதுவரைக்கும் ரூ. 5,500 கோடி மதிப்புள்ள கோவில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளது என்றால், அது திமுக ஆட்சியில்தான்
உள்ளபடியே, அவர்களுக்கு (நிர்மலா சீதாராமன் போன்றவர்க ளுக்கு) பக்தி என்று ஒன்று இருந்திருந் தால், என்ன செய்ய வேண்டும் என்றால், திமுக ஆட்சியை பாராட்ட வேண்டும். அந்த பக்தி இல்லை. பகல் வேஷம் அது. மக்களை ஏமாற்று வதற்காக வேஷம் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அதுதான் உண்மை.
அது மட்டுமல்ல, ஒரு காவல்துறை அதிகாரி (முன்னாள் டிஜிபி நட்ராஜ்) ‘வாட்ஸ் ஆப்’பில் ஒரு செய்தி போடு கிறார். அதற்கு நாம் வழக்கு போட்டுள் ளோம். ‘இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அந்த ஓட்டுக்கள் இல்லா மலேயே நாங்கள் வெற்றி பெற்று விடு வோம்’ என்று நான் சொன்னதாக என் பெயரிலேயே ‘வாட்ஸ் ஆப்’பில் ஒரு காவல்துறை அதிகாரி- பணி ஓய்வு பெற்ற அந்த அதிகாரி- இதை போட்டுள் ளார். அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய வகையில், வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.