சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர்விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத துவக்கத்தில் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் 610 ரூபாயில் இருந்து ரூ660 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒருமுறை எரிவாயு சிலிண்டர் விலை ரூ50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை தற்போது ரூ660ல் இருந்து 710 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை எளிய மக்கள் தற்போது மேலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.