tamilnadu

கொரோனா வேகம் குறையவில்லை 1,974 பேருக்கு ஒரேநாளில் தொற்று

சென்னை, ஜூன் 14- தமிழகத்தில் ஞாயிறன்று  1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது, 38 பேர் உயிரிழந்துள்ளனர். இத னால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆகவும், பலி எண்ணிக்கை 435 ஆகவும் அதி கரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ கத்தில் ஞாயிறன்று 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து வந்தவர்கள். மொத்தபாதிப்பு 44,661 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 79 பரிசோதனை மையங்கள் மூலமாக ஞாயி றன்று 18,782 மாதிரிகள் சோதனையிடப் பட்டுள்ளன. மொத்தம் 7,10,599 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. சென்னையில் 31 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருது நகர், விழுப்புரம், மதுரை, செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் தலா ஒருவர் என மொத்தம் 38 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழ கத்தில் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிறன்று 22 பேர் அரசு மருத்துவ மனையிலும், 16 பேர் தனியார் மருத்துவ மனையிலும் உயிரிழந்துள்ளனர். 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள னர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 24,547 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது 19,676 பேர் சிகிச்சையில் உள்ள னர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,270 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 37,252 பேர், 60 வயதைக் கடந்தவர்கள் 5,139 பேர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.