சென்னை, ஏப். 26- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இரண்டாவது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். நாடு முழுவதும் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகளவு பாதித்த மாவட்டங்களை (15க்கு மேற்பட்டோர் தொற்று ஏற்பட்டி ருந்தால்) ‘ஹாட் ஸ்பாட்’ பகுதி களாக அறிவித்து, அங்கு கண்கா ணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ‘ஹாட் ஸ்பாட்’ பிரிவில் 31 மாவட்டங்கள் உள்ளன. தமிழ கத்தில் ஏப்.25 நிலவரப்படி 1,821 பேர் வைரஸ் தொற்றால் பாதிக் கப்பட்டு தற்சமயம் மருத்துவ மனைகளில் 831பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச மாக சென்னையில் மட்டும் 495 பேர் பாதிக்கப்பட்டு 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதி களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறை கள், தூய்மைப் பணிகள், வெளி மாநில தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதி கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பி வருகிறது.
அதன்படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலர் வி.திருப்புகழ் தலைமை யிலான மத்தியக் குழுவினர் சென்னை வந்துள்ளனர். தலை மைச் செயலகத்தில் தலைமைச் செயலர் கே.சண் முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி னர். வெளிமாநில தொழிலா ளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள், அவர்களுக்கு செய்து தரப்படும் வசதிகள் குறித்து குழு வினரிடம் தலைமைச் செயலர் விளக்கினார். மேலும், நோய்த் தொற்றை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
இக்கூட்டத்தில் வரு வாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ் ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளி கைக்கு சென்ற மத்தியக் குழுவி னர், மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி, அந்த பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பரிசோதனை கள் குறித்து ஆணையர், அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், ஆழ்வார்ப்பேட்டை சி.பி.ராமசாமி சாலை சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 52 வெளி மாநிலத் தொழிலா ளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். பிறகு, நியாய விலைக் கடை களில் பொது மக்களுக்கு வழங் கப்படும் அரிசி உள்ளிட்ட இலவச பொருட்கள், ரூ.500-க்கு 19 வகை யான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தனர்.
அதன்பின், தண்டையார் பேட்டை மருத்துவமனைக்கு சென்று, தனிமைப்படுத்தப்பட்ட வர்கள் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஞாயிற் றுக்கிழமையன்று (ஏப்.26) ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில், உரிய பாதுகாப்பு கவசங்களு டன் சென்று ஆய்வு மேற்கொண்ட னர். அதன் பிறகு, கோயம்பேடு வணிகவளாகத்துக்கும் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் 3 நாட்களுக்கு சென் னையில் முகாமிட்டு, பல்வேறு பகுதிகளை பார்வையிட உள்ள னர். தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளனர். ஏப்.28 அன்று தில்லி திரும்பும் குழுவினர், மத்திய அர சிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.