வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்று உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத் துறை தெரி வித்துள்ளது.
கொரோனா வைரசை சீனா உருவாக்கியதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஆதாரமற்று கூறினார். இதனைஉலக சுகாதார அமைப்பு நிராகரித்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி 90 நாளில் கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.அமெரிக்க உளவு அமைப்புகள் இது தொடர்பாக விசாரணை நடத்தின. ஆனால் கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதை கண்டுபிடித்து உறுதிபட கூற முடியாமல் அவை திணறி உள்ளன. இதுகுறித்து அமெரிக்க தேசிய உளவுத்துறை அளித்த அறிக்கையில், “இந்த வைரஸ் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறிய அளவிலான வெளிப்பாடு மூலம் மனிதர்களைப் பாதித்திருக்கலாம். டிசம்பர் மாதம், வூகான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பெருமள வில் தாக்கியிருக்கலாம்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான உளவுஅமைப்புகள், கொரோனா வைரஸ் மரபணு ரீதியில் உருவாக்கப்பட்டிருக்காது என்று குறைந்த நம்பிக்கையுடன் மதிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும், 2 உளவுஅமைப்புகள் எந்த வகையிலும் ஒரு மதிப்பீட்டைச் செய்வதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளன.உளவு அமைப்புகளின் அனைத்து தகவல்களையும், பிற தகவல்களையும் பரிசீலித்த பின்னர், கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதில் உளவு அமைப்புகள் பிளவுபட்டுள்ளன.இரண்டு அம்சங்களை எல்லா உளவு அமைப்புகளும் நம்பத்தகுந்தவை என மதிப்பிடுகின்றன. ஒன்று, இந்த வைரஸ்இயற்கையாக வெளிப்பட்டு விலங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். மற்றொன்று, அது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடைய சம்பவத்தைக் கொண்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்க உளவு அமைப்புகளின் அறிக்கை குறித்து சீனா கூறுகையில், அமெரிக்க தரப்பு விரும்பியபடி அமெரிக்க உளவு அமைப்பினர் எந்த ஒரு சரியானபதிலையும் அளிக்கவில்லை. அத்த கைய முயற்சியைத் தொடர்வது வீண். மேலும் இது அறிவியலுக்கு எதிரானது. கொரோனா தோன்றியது முதல்திறந்த, வெளிப்படையான, பொறுப் பான அணுகுமுறையை சீனா கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.