tamilnadu

img

கொரோனா எதிரொலி: சென்னை ஐஐடி-யை மூட உத்தரவு....

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளதை அடுத்து, அனைத்து துறைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது.இந்நிலையில் சென்னை ஐஐடி திறக்கப்பட்டது. வழக்கம் போல் மாணவர்கள் வகுப்புகளுக்கு தொடர்ந்து வந்தனர் இந்நிலையில், 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என மொத்தம் 71 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 
சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட ஐஐடி தலைமை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஐஐடி விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.குறிப்பாக, சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் மூடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சிகிச்சை...
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சென்னை  ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா பாதிக்கப் பட்டுள்ள ஐஐடி மாணவர்களுக்கு கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப் படுகிறது.சென்னை ஐஐடியில் இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. ஐஐடி மாணவர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியது நமக்கு பாடம். இதை ஒரு பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 33 பேருக்கு உறுதியாகி உள்ளது. மேலும் 33 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.சென்னை ஐஐடி கேண்டீனில் உணவருந்தாமல் விடுதிக்கு எடுத்துச்சென்று சாப்பிட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஐஐடி வளாகத்திற்கு சென்று சுகாதாரத்துறை அமைச்சரும் நானும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

;