tamilnadu

img

சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி கல்வி கடன் வழங்க கூட்டுறவு வங்கி ஒப்புதல்

சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி கல்வி கடன் வழங்க கூட்டுறவு வங்கி ஒப்புதல்

திருவண்ணாமலை, ஆக.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் காரணமாக, கல்வி கடன் வழங்க கூட்டுறவு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மத்திய கூட்டுறவு வங்கி, மாண வர்களுக்கு கல்வி கடன் கொடுப்பதில் தாமதப்படுத்தும் அலட்சியப் போக்கை கண்டித்து சிபிஎம் சார்பில் செவ்வாயன்று (ஆக.19) வந்தவாசி சன்னதி தெருவில் வங்கி முன்பு காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. கட்சியின் வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், எஸ்.சுகுணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, வங்கி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், மாணவனுக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை மாலைக்குள் இரண்டு ஆண்டுக்கான கல்வி கடன் தொகையான 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வங்கியின் மேலாளர் தெரிவித்ததை அடுத்து காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டப்  பொருளாளர் சுகுமார், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டக் குழு உறுப்பினர் இஸ்மாயில், மலைவாழ் மக்கள் சங்க பொறுப்பாளர் ராஜா, ஊர் பொதுமக்கள் அன்வர் ரஷீத், ரகு மான், அஜீஸ், அப்பு, ரஹ்மத்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.