tamilnadu

img

‘நண்பன் வாழ்க்கையை இயற்கை எடுத்துக் கொண்டது’

சென்னை, டிச.28- தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். பின்னர் 2005 ஆம் ஆண்டு தேமுதிக கட்சியைத் தொடங்கி அரசியலில் கால்பதித்தார். இவரது கட்சி 2011 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று  எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இத னால் 2011-2016 ஆம் ஆண்டு வரை  எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

இதையடுத்து அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வது குறைத்துக் கொண்டார். தொடர்ந்து சிகிச்சை, ஓய்வு என்று விஜயகாந்த் இருந்தார். 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இங்கு இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பினார்.

இதையடுத்து, உடல் நலக்குறைவு  காரணமாக மீண்டும் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயகாந்த் மறைவுக்கு அரசி யல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், “நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான நண்பர் விஜய காந்தை இயற்கை எடுத்துக் கொண்டது. அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும், அரசியலிலும் தனது  கடும் உழைப்பினால் வெற்றிகரமான  முத்திரைகளைப் பதித்த சாதனை யாளர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, “தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது; தமிழ்  திரையுலகின் ஜாம்பவான்; அவரது  நடிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்தது; தமிழ்நாடு  அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர் பொதுச் சேவை யில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்; அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள் ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன்,“திரைத்துறையில் நுழைந்து வெற்றிகரமாக வளர்ந்து “புரட்சி கலைஞர்” என அனைவராலும் ஏற்கப் பட்டார். காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வேடத்தில் அதிகபட்ச திரைப்படங்களில் மிகச் சிறப்பாக நடித்த விஜயகாந்த் அனை வராலும் “கேப்டன்” என்று அழைக்கப் பட்டார். தனிப்பட்ட முறையில் பழகுவ தற்கு இனிய பண்பாளர்” என்று தெரிவித்துள்ளார்.

 ராகுல் காந்தி, “சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. அவரது குடும் பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்”என தெரிவித் திருக்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, “பொதுவாழ்வி லும், கலைத்துறையிலும் செயற் கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்க ளால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் மறை வுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

விசிக தலைவர் தொல். திருமாவள வன், “ விஜயகாந்த் மறைவு தமிழ்  சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக் கும் பேரிழப்பு ; அவரை பிரிந்து  வாடும் குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்”என தெரிவித் துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “தமிழ்த் திரையுலகிலும், அரசியலிலும் தமக்கென தவிர்க்க  முடியாத இடத்தை வென்றெடுத்தவர் விஜயகாந்த். அரசியலைக் கடந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு  உண்டு; அவருக்கும் என் மீது மரியாதை உண்டு. மிகுந்த இரக்க குண மும், மனித நேயமும் கொண்டவர். திரைத் தொழிலாளர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவர் மீதும் எல்லையில்லாத அன்பும், அக்கறையும் காட்டியவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பட துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.