tamilnadu

img

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.17% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.69% பேரும், மாணவர்கள் 87.26% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 85.75% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 92.36% பேரும், தனியார் பள்ளிகளில் 98.09% பேரும், இருபாலர் பள்ளிகளில் 91.61% பேரும், பெண்கள் பள்ளிகளில் 94.46% பேரும், ஆண்கள் பள்ளிகளில் 81.37% பேரும் தேர்ச்சி.
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கியப் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை.
தமிழ் - 8
ஆங்கிலம் - 13
இயற்பியல் - 696
வேதியியல் - 493
உயிரியல் - 171
கணிதம் - 779
தாவரவியல் - 2
விலங்கியல் - 29
கணினி அறிவியல் - 3432
வணிகவியல் - 620
கணக்குப் பதிவியல் - 415
பொருளியல் - 741
கணினிப் பயன்பாடுகள் - 288
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 293
ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 8418.
 

;