சிஐடியு வடசென்னை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் ஓட்டேரி குக்ஸ்சாலையில் உள்ள ஏ.பி. நினைவகத்தில் ஏ.ஜி.காசிநாதன் தலைமையில் செவ்வாயன்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில் தில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட
வர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தை மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமாரிடம் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, வி.குப்புசாமி, இரா.மணிமேகலை, ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.