tamilnadu

img

“மக்களவைத் தேர்தலில் ஓய்வின்றி உழைப்போம்”

சென்னை,பிப்.3- பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் பிப்.3 அன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப்  பேரணியாகச் சென்று சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினை விடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணி  நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற னர்.

பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்

இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு  பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  “அண்ணா காட்டிய வழியில் தமிழ் நாட்டின் உரிமைகளை வென்றெடுக்க மாநில சுயாட்சிக்கு ஊறு விளைவிக் கும் பாசிஸ்ட்டுகளை வீழ்த்த உறுதி யேற்போம்” என்றார்.

வெளிநாடு சென்றிருக்கும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். துர்கா ஸ்டாலின்,  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக் கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.