ஜன. 8 அகில இந்திய வேலை நிறுத்த விளக்க கூட்டம்
சென்னை, டிச. 27- மின்சார சட்ட மசோதா 2018ஐ திரும்பப் பெற வேண்டும், மின்சார வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும், 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தியும், ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத் தத்தை விளக்கியும் தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு வெள்ளியன்று (டிச. 27) பிரச்சார விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன், மாநிலத் தலைவர் ஜெய்சங்கர், பவர் இன்ஜினி யர்ஸ் ஆர்கனிசேஷன் பொதுச் செயலாளர் கே. அருள்செல்வன், வி.ராமச்சந்திரன் (மின்சார தொழி லாளர் பொது சம்மேளனம்), கே.சந்திரசேகரன் (கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்), சிங்கார ரத்தினசபாபதி (தொழிலாளர் முன்னேற்ற சங்கம்), கே.செல்வராஜ் (மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம்), டி.வி.சேவியர் (ஐஎன்டியுசி சேவியர் பிரிவு), ஆர்.சொர்ணராஜ் (ஐஎன்டியுசி சொர்ண ராஜ் பிரிவு), ஏ.சேக்கிழார் (எம்ளாயீஸ் பெடரேஷன்), எம்.சுப்பிரமணியன் (தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மேல்மருவத்தூர் கோவில் நிர்வாகம் மிரட்டியதால் விஷம் குடித்த ஆட்டோ ஓட்டுநர்
மதுராந்தகம், டிச. 27- மேல் மருவத்தூர் கோவில் நிர்வாகம் மிரட்டியதால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோவில் செயல்பட்டு வருகின்றது. கோவில் நிர்வாகத்திற்குட்பட்டு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இப்பகுதி தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சார்ந்தவர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இப்பகுதியில் சிலர் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இங்கு ஓட்டப்படும் ஆட்டோக்கள் அனைத்தும் கோவில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் உள்ளது. கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் வியாழனன்று அச்சிறுப்பாக்கம் வடக்கு காலனியைச் சார்ந்த சத்திய நாதன் என்பவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவில் பகு திக்குச் சென்றுள்ளார். அப்போது கோவில் நிர்வாகத்தைச் சார்ந்த சிலர் சத்தியநாதனை கடு மையாகத் தாக்கி ஆட்டோவை பறி முதல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சத்தியநாதன் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற் சித்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சத்தியநாதனின் உறவினர்கள் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரை கோவில் நிர்வாகத்தின் நிர்பந்தத்தால் கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்துள்ளனர்.
இருவர் படுகாயம்
இதே பேன்று கீழ்மருவத்தூ ரைச் சார்ந்த தினேஷ் என்பவர் கோவில் நிர்வாகத்திற்குட்பட்டு அன்னதான கூடத்திற்கு தனது வாகனத்தில் உணவு ஏற்றிச் சென்றுள்ளார். உணவுகளை இறக்கி வைத்துவிட்டுச் செல்லு மாறு கோவில் நிர்வாகத்தை சார்ந்த சிலர் தினேஷ் மற்றும் சோற்றுப்பாக்கத்தைச் சார்ந்த கணபதி ஆகியேரை தனி அறை யில் வைத்து கட்டை கம்பிகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் மேல்மருவத்தூர் காவல் நிலை யத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் உதவியுடன் புகார் தெரி வித்துள்ளனர். புகாரை விசாரிக்க வேண்டிய காவல் துறை கோவில் நிர்வா கத்தின் நிர்ப்பந்தத்தால் புகார் கொடுத்தவர்களை மிரட்டி புகாரைத் திரும்ப பெற வைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் காவல் நிலையம் செல்வதற்கே அஞ்சுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களும், காவல் துறையின் கட்டப்பஞ்சாயத்தும் நடைபெற்று வருவதால் காவல் நிலையத்தை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியி னர் தெரிவித்துள்ளனர்.