வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

தமிழக முதல்வருடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு....

சென்னை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் ஷெகாவத்  சந்தித்து பேசினார்.

சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்.

;