சென்னை, ஜுன் 2- சிறுநீர்ப்பை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசியம் என்று ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கதிர்வீச்சு உற்று நோயியல் துறை இயக்குநர் மருத்துவர் ஏ.என். வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்
சிறுநீர்ப்பையில் உருவாகும் புற்று நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நம்பிக்கையின் சித்திரம் (கேன்வாஸ் ஆப் ஹோப்) என்ற தலைப்பில் ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 30) நடைபெற்றது.
இதில் பேசிய அவர் சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது உலக அளவில் காணப்படும் 11 வது மிகப்பெரிய புற்றுநோய் ஆகும். இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் சிறுநீர் பை புற்றுநோய் என்பது ஒரு அரிதான மற்றும் வேகமாக பரவக்கூடிய புற்றுநோய் ஆகும்.
நாட்டில் ஒரு லட்சம் பேரில் 3.57 என்ற அளவில் புற்றுநோய் இருப்பதாக ஐந்தாண்டு கால ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப் புற்று நோயால் சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மதிப்பி டப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையின் மூலம் கிடைக்கக் கூடிய விளைவுகளை தெரியப்படுத்து வதற்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வும் ஆரம்ப நிலையில் அதை கண்டறி வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
காரணங்கள்
புகைப்பிடித்தல் மற்றும் குடும்பத்தில் பிறருக்கு புற்று நோய் இருந்தால் குடும்பத்தைச் சேர்ந்த பிறருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
ஓவியர் டிராஸ்கி மருது
இந்த நிகழ்ச்சியில் ஓவியர் டிராஸ்கி மருது பேசுகையில்,“ விழிப்புணர்வையும் சிந்தனையையும் தூண்டி உத்வேகம் அளிக்கும் திறன் ஓவியத்திற்கும் கலைக்கும் இருக்கிறது” என்று கூறினார்.
சிறுநீர்ப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஓவியக் கலையை பயன்படுத்தும் மருத்துவ மனையில் முயற்சி பாராட்டுக்குரி யது என்றும் அவர்தெரிவித்தார். இந்த திட்டத்தின் வாயிலாக சமுதாயத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மேலும் பரவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.