tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பங்குச் சந்தையில் பாஜக பல ஆயிரம் கோடி மோசடி
செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 4- சென்னை சத்தி யமூர்த்தி பவனில்  செய்தியாளர்களி டம் பேசிய காங்கி ரஸ் தலைவர் செல் வப்பெருந்தகை, “தாங்கள் வெற்றி பெறப் போவதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் பாஜகவினர் பங்குச் சந்தையில் பல ஆயிரம் கோடிகளை மோசடியாக சம்பாதித்திருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தாங்கள் வெற்றிபெறப் போகிறோம் என எப்படி எல்லாம் பாஜக தில்லு முல்லு செய்தது என்று நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக கூறி வந்தோம். இப்போது  அது நிரூபணம் ஆகி இருக்கிறது” என்  றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட் டுள்ளார்.

3 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய வாசனின் த.மா.கா

சென்னை, ஜூன் 4- பாஜகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி சேராத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முதல் கட்சி யாக பாஜகவுடன் கூட்டணியை அறி வித்தது. தொண்டர்களின் எதிர்ப்பை யும் மீறி, கட்சியின் தலைவரான ஜி.கே.  வாசன், பாஜகவிடம் தொகுதி பேரத்தில்  இறங்கினார். முன்னாள் முதல்வரான ஓ.  பன்னீர் செல்வத்திற்கு 1 சீட் மட்டுமே  பாஜக தந்தது. வாக்கு வங்கியை  கொண்டிருக்கும் டிடிவி தினகரனின்  அமமுகவுக்கு 2 சீட் மட்டுமே பாஜக  தந்தது. ஆனால், வாசனுக்கு மட்டும்  ஈரோடு (பி.விஜயகுமார்), ஸ்ரீபெரும்  புதூர் (வேணுகோபால்), தூத்துக்குடி (விஜயசீலன்) என 3 இடங்களை பாஜக  ஒதுக்கியது. பாஜக தலைவர்களைக் காட்டிலும், ஜி.கே.வாசன் பாஜகவுக்கு  ஆதரவாக பேசி வந்தார். தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் கூறப்பட்ட இடங்  களை விட அதிகமான இடங்களை தமிழ்  நாட்டில் பாஜக பெறும் என்று இரண்டு  நாட்களுக்கு முன்பு கூட கூறினார். இந்  நிலையில், செவ்வாயன்று வாக்கு எண் ணிக்கை முடிவில், தமாகா தான் போட்டி யிட்ட 3 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

தமிழக முதல்வருக்கு இரா.முத்தரசன் பாராட்டு

சென்னை, ஜூன் 4- தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணியின்  வெற்றிக்காக, முதல்வர் மு.க. ஸ்டாலி னுக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

“நடந்து முடிந்த மக்களவைத் தேர்த லில் திமுக தலைமையிலான மதச்சார்  பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள்,  இந்தியா கூட்டணி சார்பில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மாபெரும்  வெற்றி பெற்றுள்ளன. ‘இந்தியா’ கூட்ட ணிக்கு எதிராகவும், இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்துவதில் முக்கி யப் பங்கு வகித்த திமுக மீதும் பாஜக  தலைவர்கள் வெறுப்பூட்டும் அருவருப்பு  பரப்புரையில் ஈடுபட்டனர்.

பாஜக-வுக்கு ஆதரவாக நின்ற ஊட கங்கள் செய்தி என்ற பெயரிலும், கருத்  துக் கணிப்பு என்ற பெயரிலும் அடிப்படை  ஆதாரமற்ற தகவல்களை திணித்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர். இவை அனைத்தையும் நிராகரித்து புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச்  செய்த வாக்காளர்களுக்கும், ஆதரித்த பொதுமக்களுக்கும், தேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்ட வெற்றிக்கு வழிவகுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரி விக்கிறோம்” என்று முத்தரசன் குறிப் பிட்டுள்ளார்.

அமைதியாக நடந்தது வாக்கு எண்ணிக்கை!
சத்யபிரதா சாகு தகவல்

சென்னை, ஜூன் 4- தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலை மை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது, “தமிழ்நாட்டில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடை பெற்றது. புகார் எதுவும் வரவில்லை” என்றார்.

“நெல்லையில் 30 விழுக்காடு தபால்  வாக்குகள் செல்லாது என்று அறிவித்தது  தொடர்பான புகார் குறித்து தேர்தல் அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்”  என்று தெரிவித்த அவர், “வாக்கு எண் ணும் மையங்களில் இருந்து நேரடியாக தகவல் வெளியிடப்படும்” என்றும் “இந்  திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் அனைத்து தகவல்களும் பதிவு  செய்யப்படுகிறது” என்றும் கூறினார்.

 

;