tamilnadu

இயற்கை மருத்துவ தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்வு

பொள்ளாச்சி, நவ.22- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 3 ஆவது இயற்கை மருத்துவ தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இயற்கை மருத்துவர் அர்ச்சனா, செவிலியர்கள் ஷாலினி, தங்கதுரை, மருத்துவர் சுரேஷ் ஜோசப், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், இயற்கை மருத்துவம் குறித்தும், வாழ்வியல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.