tamilnadu

img

அம்பத்தூர் ஐடிஐ-யில் (மகளிர்) விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, மே 17- அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) ஜூன் 7ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது.  எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத வர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர வயது வரம்பு இல்லை. தையல் தொழில் நுட்பம் பயில பயிற்சி காலம்  ஒரு வருடம், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கோபா (என்சிவிடி), ஸ்டெனோகிராபி (தமிழ் & ஆங்கிலம்) பயில பயிற்சி காலம் ஒரு வருடம், 10ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். கட்டிட பட வரைவாளர் பயில பயிற்சி காலம் 2 வருடம், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பயிற்சியில் சேர்வோருக்கு மாத உதவித் தொகை 750 ரூபாய், இலவச பேருந்து பாஸ், மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இரண்டு செட் சீருடை, மூடு காலணி மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ரூ. 1000 கூடுதலாக வழங்கப் படும். விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 5 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். நேரில் வர இயலா தவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.