tamilnadu

img

நாளை பெருந்திரள் அமர்வு போராட்டம்

சென்னை, அக். 28- போக்குவரத்து ஊழி யர்கள் அக்.30 அன்று சென்னையில் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை நடத்துகின்றனர்.

போக்குவரத்து ஊழியர் களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும், போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலை ப்படி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூ திய திட்டத்தைக் கைவிட வேண்டும். ஊதிய பேச்சு வார்த்தை துவக்க வேண்டும், அதிமுக ஆட்சி யில் போடப்பட்ட 8 அரசா ணைகளை ரத்து செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30, 31, நவம்பர் 1 தேதிகளில் பல்லவன் இல்லம் முன்பு பெருந்திரள் அமர்வு போரா ட்டத்தை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்க ளிடம் பேசிய கே. ஆறுமுக நயினார், “அரசு 20 விழுக் காடு போனஸ் அறிவித்து ள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், பிற கோரிக் கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அக்டோபர் 30 ஆம்  தேதி ஒரு நாள் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடை பெறும்” என்றார்.