மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதைக் கண்டித்தும், குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் நிர்ணயக் கோரியும் வரும் ஜன. 8ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த விளக்க கூட்டம் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மின்சார வாரிய மேற்கு வட்ட பொறியாளர் அலுவலகம் அருகே மின் ஊழியர் மத்திய அமைப்பின் மேற்கு கிளை செயலாளர் எஸ்.தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே.ரவிச்சந்திரன், தலைவர் கனேஷராவ், பி.லோகேஸ்வரன் (ஜனதா சங்கம்), ராஜேந்திரன் (தொ.மு.ச), அரிதாஸ், சரவணன், பி.எஸ்.பார்த்தசாரதி, அருள், வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.