tamilnadu

அங்கீகாரம் பெறாத 366 பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சென்னை, ஏப்.10-தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரசின் உரிய அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட 366 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இப்பள்ளிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது. பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு 2 மாத கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை தற்போது மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், பிற கல்வி வாரியங்களில் இணைப்பு பெற்ற பள்ளிகள் அரசின் அங்கீகாரத்தை பெற்றே இயங்க வேண்டும் என்றும், இதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து அதன் விவரங்களை பள்ளியின் முகப்பில் ஒட்டப்பட வேண்டும் எனவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

;