tamilnadu

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டிச. 10-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்...

சென்னை:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மக்களுக்குச் சோறிடும் விவசாயிகளைப் பிச்சைக்காரர்கள் ஆக்கும் விதமாகவும்; இந்திய விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றும் விதமாகவும் பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத அளவில் விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், தில்லியில் போராடும் விவசாய அமைப்புகள் எதிர்வரும் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன. அப்போராட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தில்லி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிற 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;