tamilnadu

அதிமுக-பாஜகவின் ‘பி’ டீம்தான்... 1ம் பக்கத் தொடர்ச்சி...

1ம் பக்கத் தொடர்ச்சி....

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிசிறை தண்டனை பெற்றவர்களை கொண்ட கட்சி, சிபிஐ நீதிமன்றம் விசாரித்து 2ஜி வழக்கிலிருந்து விடுதலை செய்தவர்களை பற்றி பேசுவது எந்த  தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எதிர்க்கட்சிகள் மீது ஏதாவது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக பேசி வருகிறது.

கேரளாவில் வரலாறு காணாத வகையில் உள்ளாட்சித் தேர்தலில்இடதுமுன்னணி வெற்றி பெற்றுள்ளது. கேரளாவையே ஆட்டிப் படைப்பதாக காட்டப்பட்ட பாஜக ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அதேகதிதான் தமிழகத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கு ஏற்படப்போகிறது என்றார்.

வன்முறையின் முகம் பாமக
பாமக-வினரின் அராஜகத்திற்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. வன்முறை என்றால் பாமக; பாமக என்றால் வன்முறை என்ற உருவம் கொண்டுள்ளனர். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு கிராமத்திற்கு சென்று ஒருவரை பார்க்கவிடாமல் தடுப்பது, தாக்குவது என்ன நியாயம்? அன்புமணி ஒரு கிராமத்திற்கு செல்லக்கூடாது என்று தாக்கினால் ஏற்றுக் கொள்வார்களா? இப்படியெல்லாம் பரபரப்பு காட்டினாலும்தேர்தலில் வெற்றி பெறப்போவ தில்லை. இவ்வளவு நாளாக சும்மா இருந்துவிட்டு இப்போது வந்து 20சதவீத இடஒதுக்கீடு என்று போராட்டம் நடத்துவதையெல்லாம் மக்கள் நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய, 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாலபாரதியை கழுத்தை பிடித்து ஒரு காவலர் கீழே தள்ளுகிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு போராட்டம் நடத்த சென்ற 6 பேரைகைது செய்து சிறையில் வைக்கின்ற னர். ஒருபுறம் அதிகாரத்தை பயன்படுத்தி தாக்குவதும், எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு சொல்லி நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். அது எடுபடாது என்றும் பாலகிருஷ்ணன் தெரி வித்தார்.

தொகுதி பங்கீடு
தொகுதி பங்கீடு குறுகிய காலத்தில் பேசி முடிக்க வேண்டி யது. அது ஒன்றும் நீண்ட பிரச்சனைஅல்ல. இரண்டு நாளில் பேசி முடிக்க வேண்டியதுதான். ஏற்கெனவேபலமுறை பேசி இருக்கிறோம். தொகுதி பங்கீடு தொடங்கும் போது சிபிஎம் சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும்.இந்த தேர்தலை பொறுத்தவரை 3வது அணி என்று யார் சேர்ந்தாலும் அது எடுபடாது. மூன்றாவது அணி என்பது அதிமுக-பாஜகவின் ‘பி’ டீமாக இருக்குமே தவிர, 3வது அணிக்கென்று தனி அரசியலோ, தனி கோட்பாடோ இருக்காது.இவ்வாறு அவர் பதிலளித்தார்.இச்சந்திப்பின்போது மாநி லக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், க.பீம்ராவ் ஆகியோர் உடனி ருந்தார்.

;