tamilnadu

img

நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் ரூ.55,000 உயர்வு.... பொறியியல் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி

சென்னை:
தமிழ்நாட்டிலுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 85 ஆயிரத்திலிருந்து 1.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 40 பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொறியியல் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. அந்த வகையில், தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இக்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வந்தன,இந்தநிலையில், தற்போது அந்த கட்டணம்  ரூ.1,40,000 உயர்த்தப் படுவதாக ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு, கட்டண நிர்ணயம் செய்து கல்லூரிகளுக்கு வழங்கியுள்ளது. கரோனா பொறியியல் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பெற்றோர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

;