tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மூழ்கும் கப்பலில் பாமக பயணம் 
சென்னை, மார்ச் 19- தமிழ்நாடு காங்  கிரஸ் கமிட்டி தலை வர் கு.செல்வப் பெருந்தகை சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்வி களுக்குப் பதிலளித்தார்.

அப்போது, பாஜகவுடன் பாமக கூட்  டணி அமைத்திருப்பதன் மூலம் மூழ்கும்  கப்பலில் ஏறி, அந்தக் கட்சியும் மூழ்கப்  போகிறது என்று கூறினார். “பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 6, 7  முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறக்க வில்லை ஏன்?” என்று கேள்வி எழுப்பிய  செல்வப்பெருந்தகை,

“மின்னணு வாக்  குப் பதிவு எந்திரத்தை நம்பியே பாஜக  தேர்தலில் நிற்கிறது. நாங்கள் மக்களை  நம்பியே நிற்கிறோம்” என்றார். “கன்னியாகுமரி தொகுதியில் விஜய்  வசந்த் போட்டியிடுவது பற்றி கட்சி மேலி டம் தான் முடிவு செய்யும்” என்று கூறிய  செல்வப்பெருந்தகை, “தம்பியை (விஜய்  வசந்த்) எதிர்த்து, அக்கா தமிழிசை போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்” எனவும் குறிப்பிட்டார்.

இந்தியா கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு
சென்னை, மார்ச் 19- தமிழக முதல்  வர் மு.க. ஸ்டாலினை, மனிதநேய ஜனநாயக  கட்சியின் தலைவ ரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமி முன் அன்சாரி சென்னை  அண்ணா அறிவால யத்தில் சந்தித்து ‘இந்தியா கூட்டணி’க்கு  தனது ஆதரவைத் தெரிவித்தார்.  

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த மக்கள வைத் தேர்தலில் திமுக தலைமையி லான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம். சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்” என்றார்.

தேர்தல் நேரத்தில் முதன்மையான நோக்கம் ஜனநாயகத்தை பாதுகாப்பது தான். மக்களவைத் தேர்தலை வெறும்  அரசியல் களமாக பார்க்கவில்லை என வும், ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும்  உள்ள போட்டியாக பார்ப்பதாகவும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரி வித்துள்ளார்.