சாலை விபத்தில் குழந்தை பலி
சென்னை, மே 14- வியாசர்பாடியில் இருசக்கர வாகனம் சாலையில் நின்ற லாரி மீது மோதிய விபத்தில் ஒன்றரை வயது குழந்தை இறந்தது.
சென்னை வியாசர்பாடி சி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (26). இவரது மனைவி நந்தினி, இவர் களுக்கு நித்திக் என்ற ஒன்றரை வயது குழந்தையும், கிருத்திக் என்ற 3 மாத குழந்தையும் உள்ளனர்.
அவர்கள் அம்பத்தூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணி யளவில் மூலக்கடை வழியாக வியாசர்பாடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலையின் இடது புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது சங்கர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் சங்கரின் ஒன்றரை வயது குழந்தை நித்திக் முகம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாகச் சென்ற வர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை நித்திக் இறந்து போனது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கீழ்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான தனியார் நிறுவன வழக்கு தள்ளுபடி
சென்னை, மே 14- நடிகர் கவுண்டமணிக்கு எதிராக தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நடிகர் கவுண்டமணி, சென்னை கோடம்பாக்கம், ஆற்காடு சாலையில் 1996ல் வாங்கிய ஐந்து கிரவுண்டு நிலத்தில் 22,700 சதுர அடியில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டே ஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒப்பந்தப்படி 2003 வரை கட்டுமான பணி தொடங்கவில்லை என கவுண்ட மணி ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கவுண்டமணியிடம் பெற்ற நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு, 2008 ஆகஸ்ட் மாதம் முதல், மாதம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து கட்டு மான நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தி ருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதிகள், கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.