tamilnadu

img

இரு வேறு விபத்தில் 9 பேர் பலி முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

மதுராந்தகம், மே 15 - சென்னை அடுத்த கல்பாக்கத்தில் சாலை யோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளா னதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதே  போல் மதுராந்தகம் அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வாயிலூர் பகுதியில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் திடீரென சாலையோர மரத்தில் மோதி அப்பளம் போல நொறுங்கியது. காரில் இருந்த  5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர்.

படுகாயமடைந்த 2 பேர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), விக்னேஷ் (24), யுவராஜ் (26) என்பது தெரிய வந்தது. ஒருவரின் அடையாளம் தெரிய வில்லை.

நண்பர்கள் 5 பேரும் புதுச்சேரிக்கு சென்று விட்டு காரில் மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளனர். அப்போது, வாயிலூர் பகுதியில் சென்ற போது, மாடு குறுக்கே வந்ததால் அதன், மீது மோதாமல் இருக்க காரை திருப்பி  உள்ளனர். அப்போது சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது விசாரணை யில் தெரியவந்துள்ளது. 5 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதே போல் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிலாவட்டம் பகுதியில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானது. துபாய் செல்லும் தனது கணவர் அப்துல்லா வை வழியனுப்பி வைத்துவிட்டு, ஜெய்புனிசா என்பவர் தனது குழந்தைகளுடன் வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்புனிசா (40) அவரது  மகன்கள் மிஷால் (20), அக்பர், பைசல் ஆகி யோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரது மற்றொரு மகன் அக்தர் (16) படு காயங்களுடன் செங்கல்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் ஓட்டுநர் சரவணன் (45) என்பவரும் விபத்தில் பலியானார்.

முதல்வர் இரங்கல்-நிவாரணம்
இந்த இரு விபத்துகளிலும் மொத்தம் 9 பேர்  பலியாகியிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். “திருச்சி-தேசிய நெடுஞ்சாலையில் தனக்கு முன்னதாகச் சென்ற லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தா ர்கள் என்ற துயரகரமான செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அக்தர் (16) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள் ளேன். இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத் தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம்,

வாயலூர் கிராமம் அருகே  கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த மற்றொரு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

;