சென்னை, மார்ச் 3 - சர்தார் பட்டேல் சாலை விரிவாக்கம் செய்யும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பழைய மகாபலிபுரம் சாலை 2006ஆம் ஆண்டு மேம் படுப்பத்தப்பட்டது. அந்தச் சாலைக்கு ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப அதிவிரைவுச் சாலை பெயரி டப்பட்டது. இந்த சாலையில் தகவல் தொழில்நுட்ப நிறு வனங்கள், கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. இதனையொட்டி இந்த பகுதியானது அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் சர்தார் பட்டேல் சாலை - ராஜீவ்காந்தி சாலை இணையும் மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
சர்தார் பட்டேல் சாலையும் அக லம் குறைவாக உள்ளதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக, அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து அடையாறு நோக்கி செல்லும் சர்தார் பட்டேல் சாலை, ஐஐடி மேம்பாலம் முடியும் இடத்திலிருந்து மத்திய கைலாஷ் வரை குறுகலாக உள்ளது.
இதனால் சின்ன மலை தொடங்கி சர்தார் பட்டேல் சாலை முழுவதும் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய கைலாஷ் சந்திப்பில் சர்தார் பட்டேல் சாலையையும் ராஜீவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.50 கோடி செலவில் எல் வடிவ மேம்பாலம் அமைக்க உள்ளது. இதற்கான பணிகள் ராஜீவ் காந்தி சாலையில் தொடங்கப்பட்டு, தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த எல் வடிவ மேம்பாலம் 2130 அடி நீளம், 27 அடி அகலம் கொண்டதாக அமைய உள்ளது. இந்த பாலப் பணியையொட்டி, சர்தார் பட்டேல் சாலையை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வரு கிறது. சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் அமைக்க மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சிஎல்ஆர்ஐ) 15 அடி அகலம் நிலத்தை இலவசமாக நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கியுள்ளது. இந்த இடத்திலிருந்த மரங்கள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இதனால் 75 அடி கொண்ட சாலை 110 அடி அகலம் கொண்ட 3 வழிப்பாதையாக மாற உள்ளது. இதேபோன்று அடையாறு-கிண்டி மார்க்கமாக செல்லும் சாலையும் அகலப்படுத்தும் பணிக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் நிறைவுறும் நிலையும் மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகன நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படு கிறது.