tamilnadu

சென்னையில் கொக்கைன் விற்பனை: நைஜீரிய பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை,ஜன.21-  சென்னையில் கொக்கைன் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 1 பெண் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.  இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி  வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அமைந்தகரை கே- 3 காவல்  நிலைய ஆய்வாளர் தலைமை யிலான காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சனிக்கிழமை (ஜன.20) அமைந்த கரை, ஷெனாய் நகர், மெட்ரோ ரயில் நிலையம் அருகே கண்காணித் தபோது, அங்கு ஒருவர் ரகசியமாக போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், காவல் துறையினர் போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அஜாகு சினேடு ஒனாச்சி (47) என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

மேலும் விசாரணையில் அஜாகு சினேடு ஓனாச்சி அளித்த தகவலின் பேரில் இவ்வழக்கில் தொடர்புடைய இவரது மனைவி எஸ்மெல்சியா மிகாஷ் (எ) லியோனி (50), அமேசீ யோன் இனலெக்வு (40) ஆகியோரை  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிட மிருந்து 1 கிலோ கொக்கைன் போதை  பொருள், ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 6 செல்போன்கள் பறி முதல் செய்யப்பட்டது. கைது செய் யப்பட்ட 3 நபர்களும் விசார ணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.