tamilnadu

img

தென்சென்னை தொகுதியில் 2வது முறையாக த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி

சென்னை, ஜூன் 5 - தென்சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டி யிட்ட த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டி யன் 2ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

திமுக தலைவர்கள் சி.என்.அண்ணாதுரை, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு போன்றோர் வெற்றி பெற்ற  தென்சென்னை மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக  த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் டாக்டர் ஜெ.ஜெயவர் தன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட 41 பேர் போட்டி யிட்டனர்.

தொகுதியில் உள்ள 20 லட்சத்து 7  ஆயிரத்து 816 வாக்காளர்களில் 10  லட்சத்து 96 ஆயிரத்து 26 பேர் வாக் களித்தனர். அதாவது 54.17 விழுக் காட்டினர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இந்த வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித், சிறப்பு பொதுப் பார்வையாளர்கள் முத்தாடா  ரவிச்சந்திரா, முகமது சபிக் முன்னிலை யில் வாக்குகள் எண்ணப்பட்டது.

அஞ்சல் வாக்குகள்

4079 அஞ்சல் வாக்குகளில் தமிழச்சி தங்கபாண்டியன் 1321 வாக்கு களும், தமிழிசை சவுந்தரராஜன் 1454  வாக்குகளும், ஜெயவர்தன் 383 வாக்கு களும், தமிழ்ச்செல்வி 151 வாக்கு களும் பெற்றனர். 684 வாக்குகள் செல்லாதவையான இருந்தது குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் வாக்கு, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 628  வாக்குகள் பெற்ற தமிழச்சி தங்கபாண்டி யன், 2 லட்சத்து 25 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தமிழச்சி தங்கபாண்டியனிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித் வழங்கினார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், த.வேலு எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வாக்கு விவரம்.
தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) 5,16,628
தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக) 2,90,683
ஜெ.ஜெயவர்தன் (அதிமுக) 1,72,491
எஸ்.தமிழ்ச்செல்வி (நாதக) 83,972
நோட்டா 15,653
வாக்கு வித்தியாசம் 2, 25, 945

;