tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொது மாறுதல் கலந்தாய்வு:
13,500 ஆசிரியர்கள் விண்ணப்பம்!

சென்னை, மே 15 - நடப்பு கல்வி யாண்டில் பொது  மாறுதல் கலந்தா ய்வில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆசிரியர்கள், தலை மை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் என  கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட நாட் களுக்குள் விண்ணப்பித்த ஆசிரியர் களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு  அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளதால், கடந்த 2  நாட்களில் மட்டும் 5,869 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக  13 ஆயிரத்து 484 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

இளைஞர்கள் தியாகத்தை  வியாபாரமாக்கும் சீமான்
விக்னேஷின் தாயார் குற்றச்சாட்டு!

சென்னை, மே 15 - காவிரிப் பிரச் சனைக்காக தீக்கு ளித்து இறந்தவர் விக்னேஷ். இவரது தாயார் செண்பக லட்சுமி, நாம் தமிழர் கட்சி சீமான் மீது, சென்னை செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக் கான குற்றச் சாட்டுகளை  வைத்துள்ளார்.

“விக்னேஷின் உயிர் தியாகத்தை வைத்து சீமான் பணம் சம்பாதிக்கிறார். விக்னேஷுக்கு நினைவு மண்டபம் கட்ட வெளிநாட்டில் பணம் வாங்கி செலவு செய்து விட்டார். அதில் ஒரு ரூபாயை கூட எங்கள் குடும்பத்தினருக்கு தர வில்லை. எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்தது போலவும், எனது கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தது போலவும் நாம் தமிழர் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வரு கின்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு சீமான் என்னை எந்த மருத்துவம னைக்கும் அழைத்து செல்லவில்லை. நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுக்கு நகை கொடுத்தது போல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள். அவர்களால் எங்களு க்கு எந்த பயனும் இல்லை.   இளை ஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் சீமான் வியாபாரம் ஆக்கிவிட்டார்” என்று செண்பகலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

8-ஆம் வகுப்பு பாடத்திலும் கருணாநிதி வரலாறு!
சென்னை, மே 15 - கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழி க்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்ப தற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற் கொண்ட நடவடிக்கைகள் பாடமாகச் சேர்க்கப்பட்டன.

பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் “பன்முகக் கலைஞர்” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்து, தமிழ் மற்றும் கலைத் துறையில் செய்த பணிகள் குறித்து 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 8 ஆம் வகுப்பு சமூக  அறிவியல் பாட புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.  கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம் பெற்றுள்ளது.

கை ரிக்சா ஒழிப்பு திட்டம், சுயமரி யாதை திருமண சட்டம், விலையில்லா மிதிவண்டி திட்டம் உள்ளிட்டவையும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

போதைப் பொருள் தடுப்பு தமிழக அரசுக்கு 
உயர்நீதிமன்றம் பாராட்டு

மதுரை, மே 15 - போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கை களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. 

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பொதுநல மனு மீதான விசாரணை நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக விசார ணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, தமிழ் நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்க காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கில் விரி வான உத்தரவை பிறப்பிப்பதற்காக விசா ரணையை ஒத்திவைத்துஉத்தரவிட்டனர்.

;