சென்னை:
பேருந்துகளில் நூறு சதவீத பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய் பரவல் தன்மைக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டன.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.ஆனால் அனைத்து இருக்கைகளையும் நிரப்பக்கூடாது என்றும், 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என அரசு கூறியிருந்தது. அரசு பேருந்துகளை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளும் 50 விழுக்காடு பயணிகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால் பேருந்து பயணிகள் கட்டுப்பாட்டில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.அதாவது, பேருந்தில் 100 விழுக்காடு பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.