tamilnadu

எஸ்சி - எஸ்டி விவசாயிகளுக்கு ரூ.1.70 கோடியில் பயிற்சி

சென்னை, டிச.16- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மைச் செயலாளர் மணி வாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 5,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்குத் தோட்டக்கலை, வேளாண் காடுகள், நர்சரி செடிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் ரூ.1.70 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 5,000 ஆதிதிராவிடர் மற்றும் 2,500 பழங்குடியின விவசாயிகளுக்குத் தோட்டக்கலை, வேளாண் காடுகள், நர்சரி செடிகள், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் போன்ற பயிற்சிகள் வழங்கும் வகையில் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2,200 விவசாயிகள் மற்றும் பழங்குடியினர்

இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட, 3,000 விவசாயி களுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.2,000 வீதம்  3,000 விவசாயிகளுக்கு ரூ.60 லட்சத்தில் தோட்டக்கலை பயிற்சியும் (2 நாள் பயிற்சி) வழங்கப்படும். ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 200  விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 800 விவசாயிகள் உள்ளிட்ட 1,000 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.4,000 வீதம் 1,000 விவசாயிகளுக்கு ரூ.40 லட்சத்தில் வனத்துறை பயிற்சியும் (2 நாள் பயிற்சி), மேலும் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 2,600 விவசாயிகள் மற்றும் பழங்குடி யினர் இனத்தைச் சேர்ந்த 900 விவசாயிகள் உள்ளிட்ட, 3,500 விவசாயிகளுக்கு, ஒரு விவசாயிக்கு, ரூ.2,000 வீதம் 3,500 விவசாயி களுக்கு ரூ.70 லட்சத்தில் வேளாண் பொறியியல் பயிற்சியும் (3 நாள் பயிற்சி) வழங்கப்படும். இதற்காக ரூ.1.70 கோடி விடுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

;