tamilnadu

img

1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி!

விக்கிரவாண்டி, ஜூலை 8- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் திங்களன்று (ஜூலை 8) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

ஜூலை 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திங்களன்று (ஜூலை 8) காலை யில் தும்பூர், நேமூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சியில் இறுதிக் கட்டப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

விக்கிரவாண்டியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்  என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்ட  அவர், தொடர் தோல்வி பயம் காரணமாகவே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.

பாஜக காலூன்ற முடியாது

மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்திற்கு வந்தார். ஆயிரம் முறை வந்தாலும் சரி தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு அந்த இடத்தை தரமாட்டார்கள் என்று ‘இந்தியா’ கூட்டணி கூறியது. இதை தமிழக வாக்காளர்கள் நிரூபித்துக் காட்டினர். அதேபோல், இந்த இடைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் பாமகவை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.