சோமாலியாவில் நடந்த டிரக் வெடிகுண்டு தாக்குதலில் 61 பேர் உயிரிழந்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சோமாலியாவில் உள் மொகடிஷூவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். வரி செலுத்துவதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றபோது, அந்த பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட டிரக்கை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.