மக்காச் சோளப் பயிர்களை துவம்சம் செய்யும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் புகார்
விருதுநகர்:
விருதுநகர் அருகே ஆமத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளர்ந்து வரும் மக்காச் சோளப் பயிர் களை காட்டுப் பன்றிகள் கடுமையாக சேதப்படுத்தி வருவதாகவும் அதைக் கட்டுப்படுத்தக் கோரியும் விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியதாவது:
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர்,வெள்ளுர், மருதநத்தம், கவலூர் உள் ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளோம். போதிய மழை இல்லாதகாரணத்தால் பயிர்கள் சரிவர வளரவில்லை.ஏக்கருக்கு பாதி பயிர்கள் மட்டுமே உள்ள நிலையில் அமெரிக்க படைப்புழு பயிர்களை தாக்கியது. இதனால் மேலும் சேதம் ஏற்பட்டது. இந்தநிலையில், காட்டுப் பன்றிகள் மற்றும் மான்கள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை மேலும் நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்தநஷ்டம் அடைந்து வருகிறோம்.எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு உடனடியாக காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இழப்பீடும் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
*******************
லாரி மீது இரு சக்கர வாகனம் மோதல்... ஒருவர் பலி
விருதுநகர்:
விருதுநகர் அருகே 4 வழிச் சாலையில்வந்து கொண்டிருந்த லாரி மீது இரு சக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள தீர்த்தகிரியைச் சேர்ந்தவர் மதி(45). லாரி ஓட்டுனரான இவர் திருமங்கலம்-விருதுநகர் 4 வழிச் சாலையில் டாரஸ் லாரியை ஓட்டி வந்தார். சத்திரரெட்டியபட்டி விலக்கு அருகே வந்த போது, கூரைக்குண்டுவைச் சேர்ந்த காளிராஜன்(53) என்பவர் வேகமாக ஓட்டி வந்தஇரு சக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில், காளிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுனர் மதி கொடுத்த புகாரின் பேரில் ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
*******************
ஊருக்குள் நுழைய விடாமல் தாக்குவோர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி யிடம் மனு
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள நல்லதரை கிராமத்திற்குள் நுழைய விடாமல் சிலர்தங்களை தாக்குவதாகவும், அவர்கள் மீது நரிக்குடி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டோர் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து அம்மனுவில் கூறியதாவது:திருச்சுழி வட்டம், நரிக்குடி அருகேஉள்ளது நல்லதரை கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவரது மகளை எங்களது உறவினரான ஒருவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வீரக்குமார் மற்றும் சிலர்சேர்ந்து தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.இதுகுறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தும் வழக்குப் பதிவுசெய்யவில்லை.
இந்நிலையில், மேலும் சிலர், நல்லதரையில் உள்ள எங்களது வீட்டின் கதவைஅடித்து நொறுக்கி விட்டனர். எனவே, இதுகுறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தோம். அதன் பிறகும்உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது எங்களது குடும்பத்தினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்கின்றனர். இதனால், விவசாயம் செய்ய முடியவில்லை. அனைவரும் நரிக்குடியில் வசித்து வருகிறோம். எனவே, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.