tamilnadu

img

சிபிஎம் தெருமுனை கூட்டம்

கள்ளக்குறிச்சி, ஏப். 14-நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பொன்.கௌதமசிகாமணி மற்றும் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோருக்கு வாக்குகள் சேகரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங் கள் நடைபெற்று வருகின்றன.திருநாவலூர் ஒன்றியம் களமருதூர், திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் அரசூர், உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எறையூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சார தெருமுனைக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை உரையாற்றினார். ரிஷிவந்தியம், அரசம்பட்டு மூங்கில் துறைப்பட்டு ஆகிய இடங்களில் செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியனும், கொட்டையூர், அரசூர், மடப்பட்டு, கெடிலம், சேந்தநாடு ஆகிய இடங்களில் செயற்குழு உறுப்பினர் டி.எம்.ஜெய்சங்கரும், களமருதூர்,காட்டுஎடையார், பெரியசெவலை ஆகிய இடங்களில் செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவராகன், எம்.ஆறுமுகம் ஆகியோரும் சின்னசேலம், நைனார்பாளையம், கள்ளக் குறிச்சி, கண்டாச்சிமங்கலம் ஆகிய இடங்களில் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.ஸ்டாலின் மணியும், கச்சிராயபாளையத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் வி.ஏழுமலையும் தெருமுனைக் கூட்டங்களில் உரையாற்றினார்.கட்சியின் இடைக்குழு செயலாளர்கள் பி.மணி, டி.மாரிமுத்து, வை.பழனி, ஆர்.தாண்டவராயன், எம்முத்துவேல், ஜெ.ஜெயக்குமார் டி.எஸ்.மோகன், ஆர்.சீனுவாசன், எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோரும், திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் தெருமுனைக் கூட்டங்களில் பெருவாரியாக பங்கேற்றனர்.