கோவையில் செல்லப்பிராணிக்கு அவரது வளர்ப்பாளர் காலில்லாத நாய்க்கு சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளார்.
கோவையை சேர்ந்த காயத்ரி என்பவர் நான்கு வயதான வீரா என்ற பெயரிடப்பட்ட நாய்க்குட்டி ஒன்றை கொரோனா ஊரடங்கு தொடக்கத்தில் வீட்டிற்கு வெளியே அடிபட்ட நிலையில் மீட்டுள்ளார். சிறு வயது முதலே செல்லப்பிராணிகள் மீது அதிக நேசம் வைத்துள்ளார். விபத்து காரணமாக இரண்டு கால்களும் அகற்றப்பட்டது. மெக்கானிக்கல் இன்ஜினியராக இருக்கும் அவரை தந்தை அதற்காக ஒரு நாற்காலியை வடிவமைக்க முடிவு செய்தார்.
நாயின் கழுத்து பட்டையுடன் இணைக்கப்பட்ட சக்கர நாற்காலி, வீரா நாய் தனது முன் கால்களைப் பயன்படுத்தி உட்கார்ந்து நடக்க துவங்கியது. பின் பகுதியில் இரண்டு கால்களுக்கு பதிலாக, சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இலகுவாக இருப்பதற்காக பிவிசி பைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், நாய் நடப்பதற்கும், உட்காருவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக காயத்ரி கூறியுள்ளார்.