ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் மறியல்; கைது
தருமபுரி, ஜூலை 9- ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கண் டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று நடை பெற்ற பொது வேலை நிறுத்த மறியலில் கலந்து கொண்டவர்களை காவல் துறை யினர் கைது செய்தனர். 44 வகையான தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி யதை திரும்பப்பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். விலை வாசி உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்க ளின் சார்பில் புதனன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்த மறியல் நடை பெற்றது. அதன்ஒருபகுதியாக, தரும புரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி, தலைமை தபால் நிலையம் அருகே வந்தடைந்து. இதை யடுத்து நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, எல்பிஎப் மாவட்டத் தலைவர் அன்புமணி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி.முருகன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் சிவலிங்கம், எஸ்எம்எஸ் மாவட்டத் தலைவர் மனோ கரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். அரூர் ரவுண்டானா அருகில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் சி.ரகு பதி தலைமை வகித்தார் எல்பிஎப் கட்டு மான சங்க தலைவர் ஜே.பழனி சிறப்பு ரையாற்றினார். பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித் தார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாநி லச் செயலாளர் எம்.லில்லிபுஷ்பம் கண் டனவுரையாற்றினார். பாலக்கோடு இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சி.கலாவதி தலைமை வகித்தார். எச்எம்எஸ் தலைவர் முரு கானந்தம், எல்பிஎப் தலைவர் லஷ்மி நாராயணன் உட்பட எண்ணற்றோர் கலந்து கொண்டு கைதாகினர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற மறியலுக்கு சிஐடியு சங்க மாவட்ட துணைத்தலைவர் வரதரா ஜன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி வாழ்த்திப் பேசினார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, எச்எம்எஸ் மாவட் டத் தலைவர் ஏ.கலைவாணன், ஐஎன் டியுசி மாவட்ட கவுன்சில் செயலாளர் பழனிவேலு, யுடிசி மாவட்டச் செயலா ளர் வி.பழனிச்சாமி, எம்எல்எப் மாவட்ட கவுன்சில் செயலாளர் வைகோ.பாலு, டிடிஎஸ்எப் மாவட்டத்தலைவர் செங் கதிர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் ஸ்டேட் பேங்க் முன்பு சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.முத்துக்குமார் தலை மையில் நடைபெற்ற மறியலில் பலர் கலந்து கொண்டனர். குமாரபாளை யம் கனரா வங்கி முன்பு சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.அசோகன் தலை மையில் மறியல் நடைபெற்றது. திருச்செங்கோட்டில் இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் எஸ்.ஜெய ராமன், சிஐடியு மாவட்ட துணைத்தலை வர் எம்.செங்கோடன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மதிமுக மாவட்டச் செயலாளர் கே.கே.கணே சன், சிஐடியு மாவட்ட துணைச்செய லாளர் சுரேஷ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் ஜெயரா மன், ஏஐடியுசி மாவட்ட பொதுத்தொழி லாளர் சங்க நிர்வாகி ஆர்.கோபிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு கைதா கினர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ். கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், எச்எம்எஸ் நிர்வாகி கணேசன், ஐஎன்டியுசி நிர்வாகி நடரா ஜன், ஏஐடியுசி நிர்வாகி சம்பத், யூடி யூசி நிர்வாகி ராஜேந்திரன், ஏஐசிசிடியு நிர்வாகி பாலு, யுஐயுசி நிர்வாகி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேட் டூர் ஸ்டேட் பேங்க் முன்பு சிஐடியு மாவட் டப் பொருளாளர் இளங்கோ தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.