tamilnadu

img

பசும்பாலாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பால்டாயிலாய் ஆர்எஸ்எஸ்-சும் உள்ளன

தருமபுரி, டிச.22- ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இயக்கம் நடத் தும் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் பயன்ப டுத்தும் பசும்பாலாய் இருக்கிற இங்கே தான், அதிகார பசிக்காக உழைக்கும் மக்களை கூறு போடும் பாஜகவும் உள் ளது என என்.சங்கரய்யா படத்திறப்பில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் உரையாற்றினார்.  விடுதலைப்போராட்ட வீரர், மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னோடி, தகைசால் தமிழர் என்.சங்கரய்யாவின் படத்திறப்பு - நினைவேந்தல் கூட்டம் மற்றும் கம்யூ னிஸ்ட் இயக்க நூற்றாண்டு மலர் வெளி யீட்டு விழா சிஐடியு தருமபுரி மாவட்டக் குழு அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ. குமார் நிகழ்விற்கு தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன் வரவேற்றார். தோழர் என். சங்கரய்யா படத்தை திறந்துவைத்து, கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு மலரை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மல ரின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் பி.இளம்பரிதி பெற் றுக்கொண்டார். இதில், மதுக்கூர் ராமலிங்கம் பேசு கையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜன சக்தி நாளேட்டின் பொறுப்பாசிரியராக என்.சங்கரய்யா இருந்தார். பின்னர் தீக் கதிர் நாளேட்டின் முதல் ஆசிரியராக இருந்தார். இன்று தீக்கதிர் நாளிதழ் 5  பதிப்பும், இணைய பதிப்பு என 6  பதிப்பாக வெளிவந்து கொண்டிருக்கி றது. தோழர் சங்கரைய்யா அவர்கள் 102 வயது வரை நிறைவான வாழ்க்கை வாழ்ந் தார். இறுதி கட்டத்தில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட போதும் கட்சிக்கு செலுத்தவேண்டிய லெவி தொகையை  செலுத்தி விட்டாயா என தன் மகன் ஞான மணியிடம் கேட்டவர் தோழர் சங்கரய்யா. இதுதான் கம்யூனிட்டுகளுக்கு உண் டான கண்ணியம். தீக்கதிரை கடைசி வரை லென்ஸ் மூலம் படித்தார். தீக்கதிர் படிப்பதை பழகிகொண்டால் நிறுத்த முடியாது, அது மூச்சு விடுவது போன்று முக்கியமானது என்றவர். 3 ஆண்டுகள் தலைமறைவு, அதிகப் படியான சிறைவாழ்க்கை வாழ்ந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை  ஆனர்ஸ் படிக்கும்போது, போராடிய தற்காக 15 நாட்கள் இடைநீக்கம் செய் யப்பட்டார். 18 மாதம் சிறையில் இருந் தார். சிறையில் இருக்கும்போது கைதி களுக்கு முறையான உணவு வழங்குவ தில்லை என கூறி, சிறையில் 8 நாட்கள்  உண்ணாவிரதம் இருந்தார். உண்ணா விரதம் இருந்த போதும் தாய் நாவலை படித்தாக ஜெயிலர் தன் சுயசரிதையில் சங்கரய்யாவைப்பற்றி எழுதியுள் ளார். தோழர் சங்கரய்யா,  சாதிமறுப்பு திருமணம் செய்ததுடன், குடும்பத்தில் உள்ளவர்களையும் சாதி மறுப்பு திரு மணம் செய்ய வைத்தார். 3 முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் எல்லா  கிராமங்களிலும் நியாயவிலை கடையை அமைக்க வேண்டும் என்கிற ஆலோச னையை சட்டமன்றத்தில் முன்வைத்து, இதனை அன்றைய முதல்வர் எம்ஜி ஆரால் ஏற்றுக்கொள்ள வைத்து, செயல் வடிவத்திற்கு கொண்டு வந்தவர்.  தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது முதலில் சங்கரயாவுக்குத்தான் வழங்கியது. விருதுடன் கொடுத்த நிதியை, கொரோனா பேரிடருக்கு பயன் படுத்திக்கொள்ள அரசிடமே திரும்ப  வழங்கியவர். இதுதான் கம்யூனிஸ்ட்டு கள். தோழர் சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு கண்டவர். ஆர்எஸ்எஸ் அமைப்பும் நூற்றாண்டு கொண்டாட உள்ளது.

ஆர்எஸ்எஸ் என்பது பால்டாயில் போன்றது, கம்யூ னிஸ்ட் இயக்கம் பசும்பால் போன்றது. மக்கள் பயன்படுத்தக்கூடியது. எளிய மக்களுக்கு நிலம் கேட்டும், ஒடுக்கப்பட்ட மக்களின், உரிமைக்காக வும், தீண்டாமை கொடுமைக்கு எதி ராக, போராடிய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  இன்று பாஜக ஆட்சியில் நாடாளு மன்றத்தில் கலர் குண்டு வீசுகின்றனர். நாடாளுமன்றம் செல்லவேண்டும் என் றால் 8 இடங்களில் தீவிரமாக பரிசோ திக்கப்படுவார்கள், அதன் பிறகே அனு மதிக்கப்படுவார்கள். ஆனால், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் அனுமதி சீட்டை வாங்கி, அதே நாடாளுமன்றத் திற்குள் இருவர் புகுந்து கலர் குண்டு  வீசுகின்றனர். இதுதொடர்பாக பிரதம ரும், உள்துறை அமைச்சரும், மௌனம்  காக்கின்றனர். கேள்வி எழுப்பிய 146  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்படுகிற அராஜகம் பாஜக ஆட்சியில்தான் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறுகிறது.   2024 இல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநில கூட்டாச்சி, மாநில உரிமை அனைத் தும் பறிக்கப்படும். கூட்டாட்சி, மதச்சார் பின்மை, ஜனநாயகம் பாதுகாக்க வேண் டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும், என் றார். முன்னதாக, இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர்  இரா.சிசுபாலன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம். முத்து, சி.நாகராசன், சோ.அருச்சுணன், ஆர்.சின்னசாமி, வி.ரவி, ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன் மற்றும் இடைக்குழு செய லாளர்கள் மாவட்டக்குழு உறுப்பினர் கள் உட்பட பலர் பங்கேற்றனர்.