அடிப்படை வசதிகள் கேட்டு காத்திருப்புப் போராட்டம்
கோவை, ஜூலை 6- கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வில்லை, என பொதுமக்கள் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் சாலையில் உள்ள கவுண்டம் பாளையம் அரசு ஊழியர் குடியிருப் பில் தினமும் குடிநீர் விநியோகம் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே வரு கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட போதுமான தண்ணீர் கிடைப் பதில்லை. மேலும், 14 மாடிகள் கொண்ட குடியிருப்பில் லிப்ட் (மின்தூக்கி) வசதி இருந்தும் முறையாக வேலை செய்வ தில்லை. அடிக்கடி லிப்ட் பழுதாகி விடுவ தால் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. கழிவுநீர் வெளியேறுவதி லும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகி றது. கழிவுநீர் கசிவு ஏற்பட்டு துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று போன்ற அபாய மும் நிலவுகிறது. எனவே, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் சனியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஞாயிறன்று வரை நடைபெற்ற இப் போராட்டம் தகவலறிந்து வந்த வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பொதுமக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒரு வாரத்தில் அனைத்து கோரிக்கை களும் சரி செய்யப்படும், என உறுதி யளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது.