tamilnadu

img

உண்டு உறைவிட பள்ளியை மாற்ற எதிர்ப்பு

உண்டு உறைவிட பள்ளியை மாற்ற எதிர்ப்பு

சேலம், ஜூன் 30- ஏற்காடு ஏகலைவா உண்டு உறை விட பள்ளியை மாற்ற பொதுமக்கள் -  பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி மக்கள் மற்றும் பொது  நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் ஏற்காடு பகுதியில் ஏக லைவா உண்டு உறைவிட பள்ளி செயல் பட்டு வருகிறது. இதனை சேலம் மாவட் டம் காரிப்பட்டி பகுதிக்கு மாற்றம்  செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. ஏற்காடு ஏகலைவா பள்ளி இடமாற் றத்தை நிறுத்தவும் கட்டுமானப் பணியை  உடனே துவங்கவும் தற்போது பள் ளிக்கு போதுமான சுகாதார வசதியை உடனே செய்து தர வலியுறுத்தியும் ஏற் காடு ஏரி ரவுண்டானா அண்ணா சிலை அருகில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி கள் பிரதிநிதி சி. கோபி தலைமை  தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத் தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் அய்யந்துரை, அருணாசலம், காங்கிரஸ் ஒன்றியத் தலைவர் ஆர். சுரேஷ் குமார் மாணவர்களின் பெற் றோர்கள் பொதுநல அமைப்புகளை சார்ந்த திரளானோர் பங்கேற்றனர்.