tamilnadu

img

சமூக வலைதளங்களில் வைரலாகும் காரப்பன் சில்க்ஸ்

எச் ராஜா காரப்பன் சில்க்ஸ் கடையை புறக்கணிபோம் என்று சமூக வலைதளத்தில் பதிவு  செய்ததைத்தொடர்ந்து #wesupporkarappansilks என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி உள்ளது. 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையைச் சேர்ந்தவர், காரப்பன். டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர். இவர், கோவையில் நடந்த, திராவிடர் இயக்க தமிழர் பேரவை கருத்தரங்கில் பேசினார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர போலீசில்  இந்துத்துவா அமைப்புகள் புகார் அளித்துள்ளனர்.. 
மேலும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா அவரது ட்விட்டர் பதிவில் காரப்பன் டெக்ஸ்டைல்சில் எந்த இந்துவும் துணிகள் வாங்கக் கூடாது என்றும், அனைவரும் அந்த கடையை புறக்கணிப்போம் என்றும் பதிவிட்டிருந்தார்.  இதைத்தொடர்ந்து தற்போது எச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காரப்பனிற்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் we support karappan silks என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.