tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக நல திட்டங்களை அமல்படுத்திடுக

ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக நல திட்டங்களை அமல்படுத்திடுக

பிஎஸ்என்எல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 2- ஒப்பந்த ஊழியர்களை வஞ் சிக்காமல், சமூக நல திட்டங்களை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர், ஒப்பந்த ஊழியர், ஓய்வூதியர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தொழிலாளர் விரோத, கார்ப்ப ரேட் ஆதரவு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை கைவிட  வேண்டும். பொதுத்துறை நிறுவ னங்களையும், அரசுப்பணிகளை யும் தனியார்மயப்படுத்தக்கூடாது. தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் முறையைக் கைவிட வேண்டும். நாடு முழுவதும் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தர மான 4ஜி மற்றும் 5ஜி சேவை களை உத்தரவாதப்படுத்த வேண் டும். ஒப்பந்த ஊழியர்களை வஞ்சிக் காமல் சமூக நலப்பாதுகாப்பு திட் டங்களை முழுமையாக அமல் படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங் கங்களின் கூட்டமைப்பினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு டெலிபோன் பவன்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் எஸ்.பாலு  தலைமை வகித்தார். இணை  ஒருங்கிணைப்பாளர் கே.பழனி சாமி கண்டன உரையாற்றினார். இதில் ஓய்வூதியர் சங்க மாநில உதவித்தலைவர் என்.குப்புசாமி, ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கே.பழனிச்சாமி நன்றி கூறினார். கோவை கோவை டெலிகாம் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு தேசிய தொலைதொடர்பு ஊழியர் கூட்டமைப்பின் மாநிலப் பொருளாளர் கே.பாலசுப்ரமணி தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய துணை பொதுச்செயலாளர் எஸ். செல்லப்பா, மாநில துணைத்தலை வர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், மாநில  உதவிச்செயலாளர் கே.சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஒருங்கிணைப் புக்குழு தலைவர் ஏ.குடியரசு, ஒப் பந்த ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ஒய்.அப்துல் முத்தலிப் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் நன்றி கூறினார்.