பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:71.02/72அடி நீர்வரத்து:790கனஅடி நீர்திறப்பு:1030கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:119/120அடி நீர்வரத்து:312கனஅடி நீர்திறப்பு:271கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:40.12/60அடி நீர்வரத்து:861கனஅடி நீர்திறப்பு:1066கனஅடி
தீத்தடுப்பு ஒத்திகை
ஈரோடு, அக்.9- ஈரோடு மாவட்ட தீய ணைப்பு மற்றும் மீட்புப்பணி கள் துறையின் சார்பில் பாது காப்பான முறையில் தீபா வளி பண்டிகை கொண்டாடு வது குறித்து விழிப்புணர்வு மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி, கலைமகள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா அவர்கள் முன் னிலையில், தீயணைப்பு மற் றும் மீட்புப்பணிகள் துறை யின் சார்பில், மாதிரி ஒத் திகை நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ் வில், தீபாவளி பண்டிகை யின் போது பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகை யில் தீயணைப்புத்துறை அலுவலர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக கையாண்டு காண்பித்தனர்.