கொரோனா தோற்று உலகையே உலுக்கி வருகிறது. இதில் இந்தியா விதி விலக்கல்ல. தொற்று பரவியதன் காரணமாக நமது நாட்டிலும் மார்ச் மாதம் 24 ஆம்தேதி தொடங்கிய ஊரடங்கு என்பது ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள் ளது. தற்போது கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள் ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.
யாருக்கான அரசு?
கொரோனா தொற்று பல படிப்பினைகளை வழங்கி யுள்ளது மட்டுமல்ல; வழங்கப் போகிறது என்பதுதான் உண்மை. தொற்று காலத்தில் அரசுகள் யாருக்கான அரசு என்பதை வெளிப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ அமைப்பிற்கும் சோஷலிச அமைப்பிற்கும் இடையிலான வேறுபாடுகளை காணமுடிகிறது. நோய்த்தொற்றை எதிர்த்த போராட்டத்திலும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலும் இடையிலான வேறு பாடுகளை காணமுடிகிறது. மத்திய அரசு அறிவித்த முதல் கட்ட நிவாரணத்திலும், இரண்டாம் கட்ட நிவாரணத்திலும் ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்டது 34 ஆயிரத்து 800 கோடி ரூபாய். இதில் குறிப்பாக ஏழை மக்களுக்கான உணவு மானியம் மற்றும் நிதி உதவி உள்ளிட்டவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கொரோனா தொற்றை எதிர்த்த போராட்டம் முடிவு பெறவில்லை என்பதே உண்மை.
பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்கிறது
தற்பொழுதும் நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. உலக வரிசையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. மேலும் இரண்டு மாதங்களில் தொற்று வேகமாக பரவும் என்ற செய்தியும் உள்ளது.
பரிசோதனைகளை செய்ய தயங்கும் அரசு
தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க பரிசோதனை களை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள். மாவட்ட அளவில் பரிசோதனைகள், ஒன்றிய அளவில் பரிசோதனைகள் என மாநிலம் முழு மையான பரிசோதனை என்று கணக்கீடுகள் முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கப்படவில்லை என்ற கோரிக்கைகள் எழுந்துகொண்டே இருக்கிறது.
ஊரடங்கால் மட்டும் கொரோனாவை எதிர்கொள்ள முடியுமா?
ஊரடங்கு மட்டுமே போதுமானதல்ல. மக்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள். விழிப்புணர்வு, சத்தான மாத்திரைகள், சுகாதாரமாக பகுதிகளை வைத்துக் கொள்வது போதிய மருத்துவ மனைகளை உருவாக்குவது நாள்தோறும் பரிசோதனையை அதிகப்படுத்துவது தொடர வேண்டிய அவசியம் உள்ளது. அதேசமயம் மக்களின் பசிப்பிணியை போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.மத்திய அரசு இதில் உரிய பங்கை செலுத்தவில்லை என்பதுதான்.
உணவு பாதுகாப்பு மேலும் நீடிக்க வேண்டும்
நாட்டிலுள்ள 23 கோடி குடும்ப அட்டைகளுக்கு (ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு) பிரதம மந்திரியின் ஏழைகளின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 5 கிலோ வழங்கப்படுமென தெரி விக்கப்பட்டது. இத்தகைய ஒதுக்கீடு தற்போது நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டு குடும்ப அட்டையில் உள்ள நபர் ஒரு வருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும்1கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் என தற்போது அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தமிழக அரசு மக்க ளுக்கான உணவு பாதுகாப்பினை எவ்வாறு செயல்படுத்தி யுள்ளது, இனிவரும் காலங்களில் எவ்வாறு செயல்படுத்த இருக் கிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டியது உள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த காலத்தில் தேசிய ஆலோசனைக் குழு பல்வேறு ஆலோசனைக ளுக்குப்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட முன் வரை வினை அளித்தது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முனைந்த போது விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஏற்கப்படாமல் 2013ல் உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தை அமலாக்கிட நிர்ப்பந்தங்களை கொடுத்து வந்த வேலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஒரே நாடு ஒரே ரேசன்
2013 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு பொது விநியோகத் திட்டத்தை செழுமைப் படுத்தப் போகிறோம், சீரமைக்க போகிறோம் என்று சொல்லி சாந்தகுமார் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவானது பொதுவிநியோகத் திட்டத்தையும் விவசாயத்தையும் சீரழிக்கும் வகையில் தான் ஏராளமான பரிந்துரைகளை அளித்தது. அதன் அடிப்படையில்தான் இன்று கொண்டு வரப்பட்டுள்ள விவசாயத்தை சீரழிக்கும் அவசர சட்டங்க ளும், ஒரே நாடு- ஒரே ரேசன் என்ற திட்டமும். உணவு பாது காப்பு சட்டத்தில் நகர்ப்புறத்தில் 50 சதவீத மக்களும் கிரா மப்புறத்தில் 75 சதவீத மக்களும் ஒட்டுமொத்தமாக 67 சதவீத மக்கள் பயனடைவார்கள் என குறிப்பிட்டு இருந்தா லும், மாநிலவாரியாக பயனாளிகள் என்ற குறிப்பில் தமிழ கத்தில் நகர்ப்புறத்தில் 37.79 சதவீத மக்களும் கிரா மப்புறத்தில் 62.55 சதவீத மக்களும் சராசரியாக 50. 55 சதவீத மக்களே பயனடைவார்கள் என உள்ளது.. இத னால் தற்போது உள்ள அனைவருக்குமான பொது விநி யோகத் திட்டம் என்பது மறுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஐந்து வகையான ரேசன் கார்டுகள்
இரண்டாவதாக வறுமைக் கோட்டுக்கு கீழ் ( BPL) வறுமைக்கோட்டுக்கு மேல் (APL) என குடும்ப அட்டைகளை பிரிப்பது என்ற முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் குடும்ப அட்டைகளை முன்னுரிமை உள்ள குடும்பங்கள்(PHH), முன்னுரிமை உள்ள குடும்பங்கள் அந்தோதயா அன்ன யோஜனா திட்டம்(PHH_AAY), முன்னுரிமை இல்லாத குடும்பங்கள்(NPHH), முன்னுரிமை இல்லாத குடும்பங்கள் (சர்க்கரை) (NPHH(S), எந்த பொருளும் வேண்டாதவர்கள் (NPHH-NC) என ஐந்து பிரிவுகளாக பிரித்துள்ளனர்.இத்த கைய குடும்ப அட்டை வகைப்படுத்தலுக்கு எத்தகைய காரணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது தான் மிகப்பெரிய கேள்வி. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அர சாணையில் தெரிவிக்கப்பட்ட காரணிகள் அடிப்படையில் குடும்ப அட்டைகள் பிரிக்கப்படவில்லை என்பதை அனை வரும் அறிவர். குறிப்பாக ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் மேல் இருந்தால் அவர் வறுமை கோட்டை தாண்டியவர் அவர். அப்படி எனில் மாதம் 8 ஆயிரத்து 333 ரூபாய், நாள் ஒன்றுக்கு ரூபாய் 274 பெறக் கூடியவர் வறுமை கோட்டுக்கு கீழ் வரமாட்டார்.
அதேபோன்று மத்திய, மாநிலஅரசு ஊழியர்கள், நகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் போன்று பெரும்பகுதி பயனாளிகளை விடுவிக்கவே அரசு முயற்சித்தது.ஆனால் தற்போது உள்ள குடும்ப அட்டை களின் வகைபாடுகள் உரிய கணக்கீட்டின் அடிப்படையில் இல்லை என்பதுதான் உண்மை. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளை உரிய காரணிகளுடன் வகைப்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோள்.
கைவிடப்படும் உணவு தானிய கொள்முதல்
அடுத்ததாக உணவு தானிய கொள்முதலை கைவிடு தல் என்ற பரிந்துரை தான். இந்தியா முழுவதும் விவசா யிகளிடமிருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்பது. மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதேசமயம் மாநில அரசுகள் எவ்வித ஊக்கத்தொகையை வழங்கக் கூடாது என்பது ஒரு நிபந்தனை. மேலும்உணவு தானிய கொள்முலை தனியாருக்கு விட்டுவிடுவது. தற்போது உள்ள இந்திய உணவு கழகத்தில் மூன்றாக பிரித்து கொள்முதல், சேமிப்பு, நுகர்வு என்பதை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான பரிந்துரையும் அதில் இருந்தது. அதன் விளைவாகத் தான் இப்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அவசர சட்டங்கள். அதை ஒட்டித்தான் தமிழ்நாடு அரசும் இருந்து அவசர சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது..
மூன்றாண்டுக்கு பிறகு மாற்றப்படட அரிசி அளவீடு
அதேபோன்று நவம்பர் மாதம் 2016 இல் இருந்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட தேசிய உணவுப் பாது காப்புச் சட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தாலும் மூன்று ஆண்டு களாக நிறைவேற்றப்படாமல் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு குடும்ப அட்டைக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொரோ னா தொற்றையொட்டி மத்திய அரசு நிவாரணமாக பிரதம ரின் ஏழைகள் நலன் காக்கும் உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று ஆணையிட்டதன் விளைவாக தமிழக அரசும் ஏப்ரல் முதல் ஏற்கனவே இருந்த அளவீடுகளை மாற்றியது.
பாதிக்கப்படும் ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்கள்
ஜூலை முதல் நவம்பர் வரை மத்திய அரசு நபர் ஒரு வருக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள் ளதால் மாநில அரசு மீண்டும் குடும்ப அட்டை களுக்கான அளவீடுகளை திருத்தி உள்ளது. அதாவது முன்னுரிமை உள்ள குடும்பங்கள் (PHH), முன்னுரிமை உள்ள குடும்பங்கள்அந்தோதயா அன்னையோஜனா திட்டம் (PHH-AAY) குடும்பங்களுக்கு மட்டும் ஏற்கனவே உள்ள அளவீடுகள் அடிப்படையிலும், முன்னுரிமை இல்லாத குடும்பங்களுக்கு (NPHH ) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி வழங்கப்படும் அரிசியை அதிகபட்சமாக 20 கிலோ எனவும், மத்திய அரசு திட்டத்தின்கீழ் வழங்கக்கூடிய அரிசியினை அதிகபட்சமாக 20 கிலோ எனவும் திருத்தி உள்ளது. இதனால் முன்னுரிமை குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன சுமார் ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.
பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
மேலும் தற்போது மத்திய அரசு அத்தியாவசிய தேவை யான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொ ருட்கள் மீதான கட்டுப்பாட்டை நீக்கி விட்டது. இதன் காரண மாக பதுக்கல்களும், விலைவாசி உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்
மேலும் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசும் தமிழக அரசும் அதற்கான அரசாணை வெளியீடு முன்னோட்ட மாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தினால் வெளிமாநில தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டாலும் இந்தியா முழுதும் ஒரே சீரான நிலை யில் பொது விநியோக திட்டம் என்பது இல்லை.
தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் அவ்வாறு இல்லை. மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு தமிழ கத்தில் உள்ள திட்டத்தின் போல் வழங்கப்படுமா அல்லது உணவு தானியங்களுக்காண விலை நிர்ணயிக்கப்படுமா என்பது தெளிவாகவில்லை. தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு விலை இல் லாமல் வழங்கப்படுமா என்பதும் தெளிவாக்கப்படவில்லை. நாடு முழுவதும் தற்போது உள்ள குடும்ப அட்டைக ளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. புலம் பெயர்ந்தவர்கள் குடும்பம் ஓரிடத்திலும் குடும்பத்தலைவர் ஓரிடத்திலும் இருக்க நேரிடும் பட்சத்தில் அவர்களுக்கான உணவு தானியம் எவ்வாறு வழங்கப்படும். புலம்பெயர் தொழிலாளிகள் ஓரிடத்திலேயே இருக்க வாய்ப்பில்லை மாதம்தோறும் இடம் விட்டு இடம் நகரும் பட்சத்தில் அவர்க ளுக்கான ஒதுக்கீடு எவ்வாறு உறுதிப்படுத்துவது, அதற்கான மானியத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது போன்ற வினாக்களுக்கு முழுமையாக விடை தெரியாமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது கடினம்.
பசியால் உயிரிழப்பு?
ஒருபுறம் விவசாயத்தை சீரழித்து, மற்றொருபுறம் பொது விநியோகத் திட்டத்தையும் முடக்குவது மக்களை மீண்டும் பசிப்பிணியில் தள்ளிவிடும் என்பதை அரசு உண ராமல் உள்ளது.கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் உயிரி ழப்பை காட்டிலும் பசியால் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐபிஇ குளோபல் பொருளாதார ஆலோ சனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அஸ்வஜித் சிங் கூறியிருப்பதை புறக்கணிக்க முடியாது.
மேலும் ஆறு மாதத்திற்கு நீடிக்க வேண்டும்
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்கின்ற நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். மேலும் வேலையில்லாதோர் எண்ணிக்கை என்பது கூடுதலாகுமே தவிர குறைவதற்கான வாய்ப்பில்லை. எனவே மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் மேலும் ஆறு மாத காலத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதும் அவசியம். மக்களின் பசிப்பிணியை போக்க உணவு தானியங்கள் வழங்குவதை உறுதி செய்யா மல் பட்டினி உயிரிழப்புக்களை தடுக்க முடியாது. மாநில அரசு உடனடியாக முடிவெடுத்து அறிவித்திடவேண்டும்.
கட்டுரையாளர் : தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு
ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)