tamilnadu

img

வெறும் பேச்சு உதவாது!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் கால் லட்சத்தைத் தாண்டி, ஏப்ரல் 27 நிலவரப்படி 26ஆயிரத்து 496 பேர் பாதிப்பு; 824 பேர் பலி என்ற நிலையில், உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நீண்ட பட்டியலில்  16வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால், மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரும் அளவில் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னணியில்தான் உண்மையான பாதிப்பு எண்ணிக்கை தெரிய வந்தது. ஆனால் இந்தியாவில் அத்தகைய பரி சோதனை பரந்து விரிந்த முறையில் இன்னும் கூட நடக்கவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இடைவிடாமல் சுட்டிக்காட்டி வருகிறார்.

இந்தநிலையில், இந்தியாவில் கொரோனா பரவலில் முதலில் அடையாளம் காணப்பட்ட ‘ஹாட்ஸ்பாட்கள்’ (அதிகபரவல் மையங்கள்) தற்போது மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. முதன் முதலில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப் பட்டு அதிகப் பாதிப்பை சந்தித்த கேரளா தற்போது மிகச்சிறந்த முன்னேற்றத்தை எட்டியிருப்பதும், கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டவுடன் மக்களைப் பாதுகாக்க இடதுசாரி அரசு களத்தில் இறங்கிய சமயத்தில், பாரதிய ஜனதா கட்சி பதவி வெறி யோடு காங்கிரசிடமிருந்த ஆட்சியைக் கவிழ்த்து  அதிகாரத்தைக் கைப்பற்றிய மத்திய பிரதேசம்  தற்போது மிக முக்கியமான ஹாட்ஸ்பாட்டாக மாறியிருப்பதும், மத்திய மோடி அரசும் பாரதிய ஜனதா கட்சியும் எந்த அளவிற்கு அலட்சியத்தின் உச்சத்தில் இருக்கின்றன என்பதை உணர்த்து கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காலத்தை ஜனவரி 30 முதல் மார்ச் 24; மார்ச் 25 முதல் ஏப்ரல் 10; மற்றும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 24; என மூன்று கட்டமாகப் பிரித்து பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள், மோடி அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது. இந்த விபரங்களின்படி, முதலாவது கட்டத்தில் 19சதவீத பாதிப்பைப் பெற்றிருந்த கேரளா, படிப்படியாக தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக இரண்டாவது கட்டத்தில் 4சதவீதமாக பாதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்து, மூன்றாவது கட்டத்தில் வெறும் 1 சதவீதம் என்ற நிலையை எட்டியிட்டிருக்கிறது.

ஆனால் முதலாவது கட்டத்தில் 19சதவீதமாக இருந்த மகாராஷ்டிரா மூன்றாவது கட்டத்தில் 31 சதவீதம்; முதல் கட்டத் தில் 6 சதவீதமாக இருந்த குஜராத் தற்போது 14 சத வீதம்; முதல் கட்டத்தில் 6 சதவீதமாக இருந்த  இராஜஸ்தான் தற்போது 9 சதவீதம்; முதல் கட்டத்தில் வெறும் 2 சதவீதமாக இருந்த மத்தியப்  பிரதேசம் தற்போது 8 சதவீதம் என்ற நிலையை  எட்டியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரை முதல்கட்டத்தில் 3 சதவீதமாக இருந்து, இரண்டாவது கட்டத்தில் 13 சதவீதம் என்ற கடுமை யான நிலைமையை எட்டி, மூன்றாவது கட்டத்தில் ஓரளவு தடுப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி யதன் விளைவாக 5 சதவீதம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. 

மரண விகிதத்திலும் பாஜக ஆளும்  குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் கடுமையான பாதிப்பையே சந்தித்துள்ளன. குறிப்பாக  குஜராத் 7சதவீதம் என்ற நிலையிலிருந்து 19 சதவீதம் என்ற நிலைக்கு சென்றுள்ளது. எனவே வெறும்பேச்சு கதைக்கு உதவாது பிரதமர் அவர்களே!